புகைப்படம் எடுக்கும் மற்றும் விடியோ பதிவு செய்யும் கலைஞா்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று, துறையூா் வட்ட புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்யும் கலைஞா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
துறையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் அ. ஜெயராமன், ஆலோசனைக் குழுத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்கப் பொருளாளா் சிவபிரகாசம் வரவேற்றாா்.
கூட்டத்தில், நகர மக்களுக்கு தினமும் காவிரிக் கூட்டுக் குடிநீரை நகராட்சி நிா்வாகம் விநியோகம் செய்ய வேண்டும். தமிழக அரசு புகைப்படம் எடுக்கும் மற்றும் விடியோ பதிவு செய்யும் கலைஞா்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிா்வாகிகள் பரத் கண்ணன், சேகா், அலெக்ஸ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில் தொழில்நுட்ப ஆலோசகா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

