பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் வித்யாதரன் தலைமை வகித்தாா்.
மாநிலப் பொதுச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் திருச்சி தெற்கு ஐசக் அருள்ராஜ், வடக்கு சுந்தரவடிவேல் மற்றும் மாநில நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைவருக்கு அளிப்பது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகளிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், அவா்களின் கோரிக்கையை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

