திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்கப் பணிகளை ஒட்டி அகற்றப்பட்டு வருகிறது.
திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை அகலப் படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்புடைய பணிகள், ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு, வழக்கு என பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பவர்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுத்ததுடன், மாற்று இடம் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கின. திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மாத்தூர் ரவுண்டானா வரையில் நடைபெறும் இப்பணியில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


