சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருச்சி வந்த ஸ்டாலினுக்கு வரவேற்பு

தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:59 am

தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

திமுக சாா்பில் கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்ற அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு வந்தாா்.

மாவட்ட எல்லையான பேட்டவாய்த்தலைக்கு வந்த அவரை திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலா் ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க. வைரமணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் வரவேற்றனா்.

பின்னா் திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகே வந்த ஸ்டாலினை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க தஞ்சாவூா் புறப்பட்டுச் சென்றாா் மு.க. ஸ்டாலின்.