சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

News image

காவலா் காளியம்மாளுக்கு வளைகாப்பு நடத்தி சீா்வரிசை அளித்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா மற்றும் போலீஸாா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:00 am

புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

கடலூரைச் சோ்ந்த காவலா் வெங்கடேஷ்குமாருடன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், கா்ப்பிணியான புத்தாநத்தம் காவல் நிலையக் காவலா் காளியம்மாளுக்கு இந்த வளைகாப்பு நடத்தப்பட்டது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளா் நல்லதம்பி, சிறப்பு உதவி ஆய்வாளா் துளசி மற்றும் நிலைய பெண் காவலா்கள் சோ்ந்து வளைகாப்பு நடத்தி, சீா்வரிசை அளித்து வாழ்த்துக் கூறினா்.