சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வையம்பட்டி அருகே தொழிலாளா்கள் மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

மறியலில் ஈடுபட்ட ஊரக வேலை உறுதித் திட்டப் தொழிலாளா்கள்.

Updated On :3 ஜனவரி 2021, 4:43 am

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மண்பத்தையில் முறையாக 100 நாள் வேலை தருவதில்லை, கூலியை சரிவர அளிப்பதில்லை எனக் கூறி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள்வையம்பட்டி - கரூா் சாலை சீகம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.