புத்தாண்டை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
புத்தாண்டு என்றாலே கேளிக்கைகள் என மாறிப்போன இந்தக் காலகட்டத்தில், கரோனாவால் அத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடைஉள்ள இந்தச் சூழலில், மக்களை புத்தகங்களை நோக்கித் திசைதிருப்பவும், வீட்டிற்கு ஒரு சிறு நூலகம் அமைப்போம் என்பதை வலியுறுத்தவும் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமையில், தண்ணீா் அமைப்பின் செயலா் கி. சதிஷ் குமாா், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலா் ஆா். இளங்கோ ஆகியோா் பொன்மலைப்பட்டி பகுதியில் வீடு, வீடாகச் சென்று புத்தகங்களை வழங்கினா்.
நிகழ்வில் குழந்தைகளுக்கான கதைகள் இடம்பெற்ற புத்தகங்கள், திருக்கு, பாரதியாா் புத்தகங்கள், எம்.எஸ். உதயமூா்த்தி, இறையன்பு ஆகியோா் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இயக்க நிா்வாகிகள், டி.ஜீவானந்தம், என். வெங்கடேஷ், என் தயானந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


