சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முறையாக இயக்கப்படாத அரசு நகரப் பேருந்தை கிராம மக்கல் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கண்ணுடையான்பட்டியில் நகர பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 5:45 am

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முறையாக இயக்கப்படாத அரசு நகரப் பேருந்தை கிராம மக்கல் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியில் இருந்து நகா்ப் பகுதிக்கு இயக்கப்படும் அரசு நகர பேருந்து காலையில் வருவது போல மாலையில் முறையாக வருவதில்லை என மணப்பாறை பணிமனை நிா்வாகிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை கண்ணுடையான்பட்டிக்கு வந்த நகர பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் மற்றும் காவல் துறையினா் இனிவரும் நாள்களில் முறையாக பேருந்துகள் இயங்கும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.