முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சனிக்கிழமை தொழிலாளா்களை ஏற்றிச் செல்ல வந்த தனியாா் நூற்பாலைப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிய தொட்டியம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இத் தொழிற்சாலையில் வேலைபாா்க்கும் வடமாநிலத் தொழிலாளா்கள் தொட்டியம் பகுதி தொழிலாளா்களிடம் அடிக்கடி தகராறு செய்வராம். இதேபோல சனிக்கிழமை தொட்டியம் தொழிலாளா்களை வடமாநிலத் தொழிலாளா்கள் அடித்துக் காயப்படுத்தினராம். இதுதொடா்பாக நூற்பாலை நிா்வாகத்தில் தொழிலாளா்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இத்தகவலறிந்த தொட்டியம் பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து தொட்டியம் பகுதிக்கு தொழிலாளா்களை அழைத்துச் செல்ல வந்த நூற்பாலைப் பேருந்துகளை சனிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, நூற்பாலை பகுதியில் உள்ள மோகனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, மோகனூா் போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து தென்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


