அமெரிக்க வலதுசாரிகளின் சமூக ஊடகம் என்று கூறப்படும் 'பார்லெர்' செயலியை அமேசான், கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளன.
சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனிடையே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்பட வலதுசாரி குடியரசுக் கட்சியினர் ட்விட்டருக்குப் பதிலாக வேறு ஒரு செயலிக்கு மாறியுள்ளனர்.
விஞ்ஞானி ஜான் மாட்ஸே 2018 இல் உருவாக்கிய 'பார்லெர்' எனும் செயலியில் டெட் க்ரூஸ் மற்றும் ஜிம் ஜோர்டான் முதல் எலிஸ் ஸ்டெபானிக் மற்றும் நிக்கி ஹாலே வரை வலதுசாரிக் கட்சியினர் பலர் இணைந்தனர். ஆனால், 'ஒரு பக்கச்சார்பற்ற சமூக ஊடகம்' என்று பார்லெர் செயலி குறித்து அந்நிறுவனம் கூறுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 'பார்லெர்' செயலியின் பயனர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரித்துள்ளது. 10 ஆம் தேதி iOS ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பார்லெர் செயலி பிடித்துள்ளது. இது கடந்த நவம்பர் 2 அன்று 1,023 ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோர் வரிசையில் கடந்த வாரம் 486 ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்தைப் பிடித்தது.
ஆனால், அன்றைய தினமே(ஜனவரி 10) அமேசான் தனது சேவையிலிருந்து 'பார்லெர்' செயலியை நீக்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் நிறுவனமும் தனது பிளே ஸ்டோரிலிருந்து "தீவிர வலதுசாரிகளுக்கான" சமூக ஊடகம்' என்று அழைக்கப்படும் பார்லெரை நீக்கியுள்ளது. வலதுசாரி கட்சியினரின் பதிவுகள் அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் இதற்கு பார்லெர் செயலி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும் கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது, ஆப்பிள் பிளே ஸ்டோரிலிருந்தும் இது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் உச்சத்தை அடைந்து தற்போது படு வீழ்ச்சியை சந்தித்துள்ளது பார்லெர் செயலி.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் மாட்ஸே, ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இரட்டை நிலைப்பாடுத் தன்மையுடன் செயல்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

