பயனாளர்களுக்கு தூக்கத்தில் இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கும் வகையில் நவீன அலெக்ஸாவை உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், உள்ளங்கை அளவுள்ள அலெக்ஸா கருவியை உருவாக்கி வருவதாகவும், இது படுக்கையறையில் படுக்கைக்கு அருகே வைத்திருந்தால், பயனாளியின் மூச்சுக்காற்றின் வேகத்தை உணரும் மிகத் துல்லியமான ரேடார் அலை மூலமாக கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பிரம்ஸ் என்ற குறிப்புப் பெயருடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புப் பணி தற்போது எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து வெளியிட அமேசான் மறுத்துவிட்டது.
ஒருவேளை நீங்கள் மிக சத்தமான குறட்டையுடன் இரவு முழுவதும் நன்றாக உறங்கினாலும், சோர்வாகவே உணர்வீர்கள். இதுதான் உறக்கக் கோளாறு.
இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனமான நின்டென்டோ, அணிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத, ரேடியோ அலைக்கற்றை வாயிலாக உறக்கத்தை கண்காணிக்கும் கருவியை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த கருவி அறிமுகமாகவேயில்லை.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


