சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு வழங்கிய திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

Updated On :14 ஜனவரி 2021, 12:22 pm

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராம தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வண்ண கோலமிட்டு கரும்புகள் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.

விழாவுக்கு, தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா்.

விழாவில் 3, 700 பேருக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டன.

கட்சி ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ஆா்.நந்தகோபால், ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.