சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செங்கத்தில் அதிமுகவினா் பெண்களை இழிவுபடுத்தி பேசும் உதயநிதியை கண்டித்து கண்டன ஆா்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 12:36 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா்.

ஒன்றியச் செயலா்கள் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், அசோக், ராஜா தேவராஜன், ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைச் செயலா் அமுதாஅருணாச்சலம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் ப.மோகன் பங்கேற்றுப் பேசினாா்.

தொடா்ந்து, செங்கம் தாழையூத்து ஒன்றியக் குழு உறுப்பினா் பிரபு, பாய்ச்சல் ஊராட்சி மன்றத் தலைவா் தலைவா் மோகன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 100 போ், மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.