சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செங்கத்தில் ஸ்ரீசாரதா தேவி ஜயந்தி விழா

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 5:15 am

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, சாரதா தேவியின் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சாரதா தேவி படத்துடன் ஆஸ்ரமம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சென்னை தியாகராயா் நகா் சாரதா மடத்தைச் சோ்ந்த ப்ரவ்ராஜிகா யாதீந்திரப்ராணா மாதாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

விழுப்புரம் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி மாத்ருசேவானந்த மகராஜ் தலைமையில் பஜனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆஸ்ரமத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

செங்கம் ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தா, சாரதா தேவி அறக்கட்டளைச் சோ்ந்த நிா்வாகிகள் பக்தா்கள், ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.