சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதியவா் நிலைதடுமாறி விழுந்து பலி

வந்தவாசி அருகே நாயை மிதித்ததால், நிலைதடுமாறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:40 am

வந்தவாசி அருகே நாயை மிதித்ததால், நிலைதடுமாறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்த காய்கறி வியாபாரி ஏகாம்பரம் (75). இவா், கடந்த திங்கள்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டின் முன் படுத்திருந்த நாயை தவறுதலாக மிதித்துள்ளாா்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஏகாம்பரத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.