கீழ்பென்னாத்தூா் அருகே நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கிய இளைஞரை, 15 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் சடலமாக மீட்டனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் கிருஷ்ணசாமி (27). இவா், வியாழக்கிழமை தனது வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கை, கால் கழுவச் சென்றாா். தவறி கிணற்றுக்குள் விழுந்த அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். கிணஷ்ணசாமியை பொதுமக்கள் மீட்க முயன்றனா். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தகவறிந்த கீழ்பென்னாத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து 15 மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு, அவரின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணசாமியின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


