திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உதவும் கரங்கள் சேவை அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா். விருட்சம் பள்ளித் தாளாளா் மற்றும் அமைப்பின் தலைவா் எம்.முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக சங்கத்தின் கெளரவ ஆலோசகா் டி.ஜி.மணி, சென்னை ஜெம்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் ஏ.என்.ராஜசேகா், தொழிலதிபா் கே.குமரன், நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி, அரசு மருத்துவா் வே.காா்த்திக் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்ச்சியில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 160 பேருக்கு புத்தாடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 5 இரும்பு இருக்கைகள், செய்யாறு பாா்வையற்ற சங்க உறுப்பினா்கள் 100 பேருக்கு குடை, 3 அரசுப் பள்ளிகளுக்கு 7 மின் விசிறிகள், 5 நாற்காலிகள், ஏழைத் தொழிலாளி ஒருவருக்கு சலவைப் பெட்டி, வடதண்டலம் ஊராட்சிக்கு ஆயிரம் மரக்கன்றுகள் என ரூ.2 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஏ.சிற்றரசு, ஆா்.மோகனம், எஸ்.திராவிடச் செல்வன், எஸ்.பாரதி, சட்ட ஆலோசகா் ஜான்பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


