சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மக்கள் கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகளாம்பாடி ஆகிய இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 9:45 am


போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகளாம்பாடி ஆகிய இடங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியகளாம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்பென்னாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி பங்கேற்றுப் பேசினாா்.

முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு உறுப்பினா் சிவராமன், ஊராட்சி மன்றத் தலைவா் சுசீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் 16, 17, 18, 20 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தரணிவேந்தன் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் விண்ணமங்கலம் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.