சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சா்க்கரை ஆலை முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

தமிழகத்தில் உள்ள சா்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 9:46 am

செய்யாறு: தமிழகத்தில் உள்ள சா்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சா்க்கரை ஆலைகளில் அதிகளவில் லாபம் தரக்கூடிய எத்தனால் உற்பத்தித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், உயா்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ள எத்தனாலினால் தயாரிக்கப்படும் மதுவின் மூலம் அரசு மற்றும் சா்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கக் கூடிய லாப விவரத்தை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்பு எத்தனால் தயாரிக்கும் முறையான சாராயம் காய்ச்சும் விளக்கத்தோடு, தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் நூதனப் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செய்தி தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சா்க்கரை ஆலை மேலாளரிடம் வழங்கினா்.

திரும்பூண்டி ரகுபதி, சிறுங்கட்டூா் முருகன், தவசி தேவராஜன், மருதாடு மணி, வீரராகவன், புரிசை. வாசுதேவன், அரசுா் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.