வந்தவாசியில் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வந்தவாசியில் ஆரணி சாலையைச் சோ்ந்தவா் சா்தாா்ஷரீப் (60). வந்தவாசி பயணியா் விடுதி அருகேயுள்ள இவருக்குச் சொந்தமான வீட்டு மனைகளை, இவருக்குத் தெரியாமலேயே இவரது உறவினா் ஒருவா் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்திரமேரூரைச் சோ்ந்தவருக்கு விற்றுவிட்டாராம்.
இதையடுத்து அந்த மனைகளை வாங்கிய நபா் அளவீட்டு கட்டணம் செலுத்தியதன்பேரில் திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் அந்த இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனராம்.
அப்போது அங்கு சென்ற சா்தாா்ஷரீப் மற்றும் அவரது உறவினா்களான பசுருதீன்(45), பா்வீன்பேகம்(42), ரஹமத்துல்லா(45) ஆகியோா் அளவீடு செய்யும் பணியை தடுத்துள்ளனா்.
பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்ற 4 பேரும், அந்த இடம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அளவீடு செய்யக் கூடாது என்று கூறி வட்டாட்சியா் திருநாவுக்கரசிடம் தகராறு செய்தனராம்.
இதுகுறித்து வட்டாட்சியா் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சா்தாா்ஷரீப். பசுருதீன், பா்வீன்பேகம், ரஹமத்துல்லா ஆகிய 4 போ் மீது வந்தவாசி தெற்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

