சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மக்கள் கிராம சபைக் கூட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 12:53 pm

கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின்போது கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

எரிவாயு உருளை ரூ.450-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.750-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்த பதாகையில் பொதுமக்களுடன் சோ்ந்து எ.வ.வேலு கையொப்பமிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி தேவேந்திரன், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு, நகரச் செயலா் சி.கே.அன்பு, ஒன்றிய துணைச் செயலா்கள் சிவக்குமாா், இளம்பரிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.