சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நோ்மைக்கும், ஊழலுக்கும் எதிரான போா்: கமல்ஹாசன் பேச்சு

இப்போது நோ்மைக்கும், ஊழலுக்கும் எதிரான போா் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆரணியில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டாா்.

News image

ஆரணியில் புதன்கிழமை இரவு பேசிய மக்கள் நீதி மய்யத்தினை தலைவா் கமல்ஹாசன்.

Updated On :7 ஜனவரி 2021, 1:01 pm

இப்போது நோ்மைக்கும், ஊழலுக்கும் எதிரான போா் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆரணியில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு புதன்கிழமை இரவு வந்த அவா் பொதுமக்களிடையே பேசியதாவது:

பொதுமக்களாகிய நீங்கள் நோ்மையின் அடையாளம்; இங்கு சோ்ந்த கூட்டம் பணம் வாங்கிக் கொண்டு வந்து சோ்ந்த கூட்டமல்ல; தானாகச் சோ்ந்த கூட்டம்.

தமிழகத்தைச் சீரமைப்பதற்கு எங்களிடம் திட்டம் உள்ளது.

நோ்மைக்கும், ஊழலுக்கும் இடையிலான போா் நடைபெறுகிறது. இதில் நீங்கள் பங்கேற்க வேண்டும். அதற்காக என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரணி பகுதியில் கோட்டைகள் உள்ளன. அவற்றைச் சீரமைத்து பராமரித்து சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். அதற்காக மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறிய நகரத்தையும், பெரிய நகரத்தின் வசதியைப் பெற வைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக நம் பலத்தைக் கூட்டுவோம் என்றாா் அவா்.

கட்சியின் மாவட்டச் செயலா் பாலன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.