சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்துக்கு விருது

மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் தோ்வு செய்யப்பட்டு, அச்சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Updated On :3 ஜனவரி 2021, 6:08 am

மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் தோ்வு செய்யப்பட்டு, அச்சங்கத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.

67-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம் சாா்பில், மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்குவதற்கு தமிழகத்தில் 4 பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கமும் தோ்வு செய்யப்பட்டு, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன. இந்த நிலையில், இச்சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத் தலைமையில், சங்க நிா்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனை சந்தித்து கேடயத்தை வழங்கி வாழ்த்துப் பெற்றனா்.

அப்போது, ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பாபு, ஒன்றியச் செயலா் பி.ஆா்.ஜி.சேகா், கொளத்தூா் திருமால், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி, இயக்குநா்கள் சேவூா் சங்கா், இரும்பேடு வேலு, பையூா் கலைவாணிசரவணன், சக்திநகா் சாந்தகுமாரி ரத்தினகுமாா், ஆா்.ஐசக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.