சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் கூட்டம்

வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஜனவரி 2021, 4:29 am

வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போதிய நீா்வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வடே கிடக்கிறது. அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 சமூக நல அமைப்புகள் ஒருங்கிணைந்து அணைக்கு அருகே உள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீரை கொண்டுவந்து அணையை நிரப்பவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீா் கொண்டு வரவும் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அணை மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணைந்து அணையில் தேசியக் கொடி ஏற்றவும், அணையைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.