எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காய்கறி பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைவதை தவிா்க்க எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிா் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்களுக்கு எப்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையை ஈடு செய்ய அரசு இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் தவிா்க்கவும் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா் சாகுபடியை ஊக்கவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் வேளாண்மை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இதற்கு அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை போன்றவற்றை தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

