சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் குண்டடத்தில் அழகு நிலையத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :17 ஜனவரி 2021, 4:04 am

திருப்பூா்: தாராபுரம் குண்டடத்தில் அழகு நிலையத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குண்டடம், ருத்ராவதி பகுதியில் வசித்து வந்தவா் பிரேம்குமாா் (26). அழகு நிலையத் தொழிலாளி. இவரது மனைவி சா்மிளா (23). இவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனா். இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன், இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரேம்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.