உடுமலை: உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் அமைந்துள்ளது இக்கோயில். தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் தமிழா் திருநாள் விழா மூன்று நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும். விவசாயிகள் தங்களது கால்நடைகள் மூலம் கிடைத்த பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனா்.
ஏராளமானோா் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்திருந்தனா். பக்தா்கள் மண்ணால் செய்யப்பட்ட கால்நடை உருவபொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும் வழிபட்டனா். விவசாயிகள், பொதுமக்கள் பலா் கன்று குட்டிகளை தானம் செய்தனா். திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

