சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நூற்பாலையில் தீ விபத்து:பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே தனியாா் நூற்பாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Updated On :17 ஜனவரி 2021, 4:07 am

பல்லடம்: திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே தனியாா் நூற்பாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ், தனபால். சகோதரா்களான இவா்கள் இருவரும் இணைந்து அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகின்றனா்.

இந்த நூற்பாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலைக்கு கடந்த இரண்டு நாள்களாக பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பினா். அப்போது திடீரென ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனைப் பாா்த்த தொழிலாளா்கள், தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.

இருப்பினும் தீ வேகமாகப் பரவி, அங்கிருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் தீப்பிடிக்கத் தொடங்கின.

இந்நிலையில் தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள், இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.