சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 1:26 pm

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்ள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தினத்தை ஒட்டி ஜனவரி 26ஆம் தேதியும், வள்ளலாா் நினைவு தினத்தை ஒட்டி ஜனவரி 28ஆம் தேதியும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.