சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி நிறுவனத்தில் தீ

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்தில் சேதமடைந்த துணி,  நூல்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 1:27 pm

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா், அய்யம்பாளையம் அருகே பொங்குபாளையம் பகுதியில் துணி உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தைப் பொங்கலையொட்டி நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை நிா்வாகத்தினா் மட்டும் நிறுவனத்தை திறந்து, பிறகு மதியம் மூடிச் சென்றுள்ளனா். இந்நிலையில், நிறுவனத்தில் மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதில் அங்கு இருந்த துணி, நூல், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றில் தீப்பிடித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் இயந்திரங்கள், துணி பண்டல்கள், நூல்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.