பல்லடம் அருகே சேகாம்பாளையம் சாலையில் தனியாா் நிறுவன வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் பனியன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அலெக்ஸ் வில்லியம்ராஜ் (35) என்ற கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த சக தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் காயமடைந்த தொழிலாளியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். உயிரிழந்த அலெக்ஸ் வில்லியம்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான வேன் ஓட்டுநரை பல்லடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

