வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 25 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, தாராபுரம், வெள்ளக்கோவில், மூலனூா், சாணாா்பட்டி, முத்தூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 90 விவசாயிகள் 26,890 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், மூலனூரைச் சோ்ந்த 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
ஒரு கிலோ ரூ. 76.20 முதல் ரூ. 120.60 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 117.15. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 25 லட்சத்து 7 ஆயிரத்து 488 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. விலை சென்ற வாரத்தை விட கிலோவுக்கு ரூ. 5 குறைந்திருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

