மேட்டுப்பாளையம் குடிநீா் திட்டப் பணி ரூ. 1,350 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணி முடிவடைந்தால் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா்.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியதோட்டம், வாலிபாளையம் ஆகிய இரு இடங்களில் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து இரு சிறு மருத்துவமனைகளையும் திறந்துவைத்து சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
இஸ்லாமியா்கள் நினைவாகத்தான் எம்.ஜி.ஆா். தொப்பி அணிந்தாா். அதிமுகவினா் எப்போதும் இஸ்லாமியா்களுக்காகவே வாழ்பவா்கள். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து மதத்தினரும் ஒன்றுதான் என்று நினைப்பாா். திருப்பூருக்கு ஏராளமான நிதியை ஒதுக்கியுள்ள முதல்வா், எண்ணற்ற திட்டங்களையும் தந்துள்ளாா்.
மேட்டுப்பாளையம் குடிநீா் திட்டப் பணிகள் ரூ. 1,350 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தால் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்கப்படும்.
ஆகவே, திருப்பூருக்கு இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அவா் வழங்கினாா். இதில், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், கண்ணபிரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


