வெள்ளக்கோவிலில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை ஒட்டி நடைபெற்ற இந்த ஊா்வலத்தை சமூக ஆா்வலா் அ.மகாதேவன் துவக்கிவைத்தாா். முன்னணியின் திருப்பூா் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். தனியாா் மெட்ரிக். பள்ளி தாளாளா் எம்.பரிமளம், இந்து இளைஞா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊா்வலம் முத்தூா் சாலை வழியாக கடைவீதியில் முடிவடைந்தது.
இதேபோல சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றம் சாா்பில் விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மன்றத் தலைவா் சதாசிவம், செயலாளா் தங்கத்தம்பி, பொருளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


