திருப்பூரில் டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (53). இவரது தாய் தெய்வானை (73). பழனிசாமி, தனது தாயுடன் அவிநாசியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.
இவரது வாகனம் அனுப்பா்பாளையம்புதூா் அருகே வந்தபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தெய்வானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பழனிசாமி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்தை ஏற்படுத்திய லாரி, அந்த வழியாக வந்த மேலும் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், அப்பகுதியில் இருந்த கடைக்குள் புகுந்து நின்றது. இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான துரைசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


