சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பூர்: தாறுமாறாக ஓடிய லாரி மோதி மூதாட்டி பலி

திருப்பூரில் தறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திங்கள்கிழமை பலியானார்.

News image

விபத்துக்குள்ளான லாரி.

Updated On :11 ஜனவரி 2021, 4:32 pm

திருப்பூரில் தறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திங்கள்கிழமை பலியானார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் இருந்து டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலையில் திருப்பூர் மாநகருக்குள் வந்து கொண்டிருந்தது. 

இந்த லாரியானது அனுப்பர்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமான ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. மேலும், அந்த வழியாகச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதுடன் சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. 

இதில், ஒரு ஒரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தெய்வானை (75) என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியின் மகன் பழனிசாமியை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அனுப்பர்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.