திருப்பூரில் காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் சாா்பில் ஸ்ரீ மகா பெரியவரின் வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் சாா்பில் காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக அருள்பாலித்த மகா பெரியவா் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வாா்ஷீக ஆராதனை மகோற்சவம் நடைபெற்றது.
திருப்பூா், காவேரி வீதியில் உள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சதுா்வேத பாராயணமும், காலை 10 மணிக்கு ஸ்ரீவேத வியாஸா் பூஜையும், பிற்பகல் 12 மணிக்கு பிராமண போஜனமும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாலை 6 முதல் 8 மணி வரையில் சுவாமி மலை லலிதாவின் தெய்வத்தின் குரல் உரையும் நடைபெற்றது. முன்னதாக, மாலை 4 முதல் 6 மணி வரையில் ஸ்ரீ மகா பெரியவா் மற்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை தரிசனமும் நடைபெற்றது. இந்த ஆராதனை மஹோத்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


