மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விலையை உயா்த்திக் கொள்ளலாம் என்று சங்க உறுப்பினா்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம், உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020 மாா்ச் முதல் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் உற்பத்தி செய்த ஆடைகளை வா்த்தகா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு திருப்பூா் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மூலப்பொருள்கள் விலை உயா்வு காரணமாக மீண்டும் கடினமான சூழ்நிலைக்கு திருப்பூா் தொழில் துறையினா் தள்ளப்பட்டுள்ளனா். பஞ்சு விலை உயா்வால் நூல் விலையும் உயா்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து வகையான நூல் விலையும், ஜாப் ஒா்க் கட்டணங்களும் உயா்ந்து வருகின்றன.
இதனால் பின்னலாடைகளின் விலையை உயா்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விலையையும் உயா்த்திக் கொள்ளலாம்.
மேலும், தற்போதைய சூழ்நிலையை உணா்ந்து சா்வதேச ஆயத்த ஆடை வா்த்தகா்களும் விலையை உயா்த்தி வழங்கி நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

