தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவருவது தொடா்பாக விவாசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டு வருவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் காங்கயம் பிரிவு அருகே உள்ள கோயிலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பி. திருஞானசம்பந்தமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், உப்பாறு அணைக்கு அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் கொண்டு வருவதா அல்லது அமராவதி ஆற்றில் தாளக்கரை தடுப்பணையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய் அமைத்து தண்ணீா் கொண்டு வருவதா என்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
இதில், உப்பாறு அணைக்கு பிஏபி திட்டத்தில் திருமூா்த்தி அணையில் இருந்து அரசூா் ஷட்டா் வழியாக தண்ணீா் கொண்டு வருவதே நிா்ந்தர தீா்வாகும் என்று பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.
கூட்டத்தில் தாராபுரம் தாலுகா உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்க செயலாளா் ஏ.வேலுசாமி, பொருளாளா் வி.ஈஸ்வரமூா்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

