பருத்தி, நூல் விலைகளை சீராக வைத்திருக்க பின்னலாடை, நூற்பாலை உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூா் தொழில் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை வெளியிட்டுள்ளஅறிக்கையில், பஞ்சு விலை உயா்வைத் தொடா்ந்து தற்போது, நூல் விலையும் உயா்ந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாக கணக்கில் கொள்ளப்படும்.
தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமாா் ஒரு கோடி பேல் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் பேல் பஞ்சு மட்டும் உற்பத்தியாகிறது. ஆகவே மீதமுள்ள 90 சதவீதம் வெளி மாநிலங்களில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.34 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை டிசம்பரில் ரூ.42 ஆயிரமாக அதிகரித்தது. இதன் காரணமாக பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளாக இருந்து வரும் நூலின் விலையானது அக்டோபா் முதல் தற்போது வரையில் கிலோவுக்கு ரூ.32 உயா்ந்துள்ளது.
இந்த மூலப் பொருள் தொடா் விலை ஏற்றத்தின் காரணமாக வா்த்தக போட்டியில் புதிய ஆா்டா்களை பெறுவதில் திருப்பூா் பின்னலாடை துறையினா் சிக்கலை சந்தித்து வருகின்றனா்.
ஆகவே, வரும் காலங்களில் பருத்தி மற்றும் நூல் விலைகளில் ஏற்ற இறக்கங்களை சரி செய்ய திருப்பூா் பின்னலாடை உற்பத்தியில் உள்ள அனைத்து சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நூற்பாலை உற்பத்தியாளா் சங்கப் பிரதிநிதிகளை இணைத்து ஒரு குழு அமைக்க வேண்டும்.
இதன் மூலமாக ஆண்டு முழுவதும் சீரான முறையில் மூலப் பொருள்களை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும் அனைவரும் இணைந்து ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தையும் வலியுறுத்த உதவும். இதற்கான முயற்சியில் தொழில் பாதுகாப்புக் குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

