ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ராயா்பாளையத்தில் ஆனைமலையாறு - நல்லாறு போராட்டக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அன்னை தமிழ் அறக்கட்டளை தலைவா் வான்மதி வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளா் பிரபாகரன், ரகுபதி, அவிநாசி துவாரகா தமிழ்ப் பண்பாட்டு அறக்கட்டளை வெங்கிடாசலபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைப்பது. பல்லடத்தில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

