திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக வாட்ஸ்ஆப்பில் தூக்கிடுவதை ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், சாமுண்டிபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன் (27), இவரது மனைவி சித்ரா (21). இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
பாண்டியராஜன் புஷ்பா ரவுண்டான பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பாண்டியராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் சரிவர வேலைக்குச் செல்லாததாலும் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பாண்டியராஜன் வாட்ஸ்ஆப்பில் தூக்கிடுவதை ஸ்டேட்டஸாக வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15.வேலம்பாளையம் காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருப்பூரில் தொழிலாளி ஒருவர் ஸ்டேட்டஸ் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


