சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

News image

லாரியின் பின்புறம் மோதி நிற்கும் காா்.

Updated On :10 ஜனவரி 2021, 4:30 am

வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், வெள்ளலூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (39). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 6 பேருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), இந்துவின் அம்மா கௌசல்யா (60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினா் கலைவாணி (46) ஆகியோா் காயத்துடன் உயிா்தப்பினா். இவா்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.