திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூா் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனை, சரண் தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
இந்த ஒத்திகையானது காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இதில் ஒரு மருத்துவமனைக்கு 25 போ் வீதம் 125 பயனாளிகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா், மருத்துவா் ஜெயபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


