வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி பல்லடத்தில் வன்னியா் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வன்னியா் சங்கத்தினா், பாட்டாளி மக்கள் கட்சியினா் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு பட்டேல் வீதி, ஜெயபிரகாஷ் வீதி, மங்கலம் சாலை வழியாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். அலுவலகம் முன்பு நகர பாமக செயலாளா் விமல்குமாா் தலைமையில் வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் வே.சுரேஷ் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து நகராட்சி ஆணையா் கணேசனை சந்தித்து மனு அளித்தனா்.
இதில், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் வி.எஸ்.கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் வே.காளியப்பன், மாநில பொறுப்பாளா் சா.புருஷோத்தமன், பாமக மாவட்டத் தலைவா் மணிகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காங்கயத்தில்...
இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கயம் நகராட்சி ஆணையரிடம் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில் பாமக மாநில செயற்குழு உறுப்பினா் என்.சேகா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், பாமக கட்சியின் நகரப் பொறுப்பாளா் கே.பி.ராஜ்கண்ணு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வெள்ளக்கோவிலில்...
இதேபோல, வெள்ளக்கோவிலில் பாமக மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணி தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்த 25 போ் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு மனு அளித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

