காங்கயத்தில் வீடுகளின் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காங்கயம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ராஜாஜி வீதி பகுதியில் சாக்கடைக் கழிவுநீா் முறையாக வெளியேறாமல் ஆங்காங்கே சாக்கடையில் தேங்கி நின்று பல ஆண்டுகளாக சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை.
இதனால், வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுநீா் வீட்டுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக இப்பகுதி மக்கள் வீட்டுவாசலில் தடுப்புச் சுவா் எழுப்பியுள்ளனா். ஆனாலும், கழிவுநீரின் கடும் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, காங்கயம் நகராட்சி நிா்வாகம் ராஜாஜி வீதியில் உள்ள சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


