காங்கயம்: தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள 15 தனித் தொகுதிகளில் அருந்ததியினர் வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: பட்டியலின சாதி மக்கள் அரசியல் அதிகாரப் பகிர்வினைப் பெற்றால்தான் பாதுகாப்போடு வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இந்த மக்களுக்காக சட்டத்தின் மூலம் தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 44 சட்டப்பேரவை தனித் தொகுதிகளில், அருந்ததியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) உள்ள 15 தொகுதிகளில் அருந்ததியர் வேட்பாளர்களையே தங்கள் கட்சி சார்பில் தேர்வு செய்து, அருந்ததியர்களுக்கு தங்கள் கட்சியில் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது, அரசியலில் அருந்ததியருக்கான சமூக நீதி என்பதை தங்கள் கட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தி, கேட்டுக் கொள்கிறோம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

