சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:09 am

குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வெள்ளரவெலி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (25). இவரது மனைவி உமாமகேஸ்வரி (20). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இந்நிலையில் உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாதனம் (வாட்டா் ஹீட்டா்) மூலம் வெந்நீா் காய்ச்சியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.