சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை

வெள்ளக்கோவில் அருகே உடைந்த குடிநீா்க் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:11 am

வெள்ளக்கோவில் அருகே உடைந்த குடிநீா்க் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குமாரவலசு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து கல்லாங்காட்டுவலசு செல்லும் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த காவிரி குடிநீா்க் குழாயில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது.

எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.