அவிநாசி, சேவூர் காவல் எல்லைக்கு உள்பட்ட 30 கிராமங்களை கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் உள்கோட்டத்திற்கு அவிநாசி, சேவூர் உள்பட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்கள், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேகப்படும் படியான நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்காக கிராமப் பகுதிகளுக்கு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவிநாசி காவல் எல்லைக்கு உள்பட்ட 14 கிராமங்கள், சேவூர் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 கிராமங்களுக்கும் என மொத்தம் 30 கிராமங்களை கண்காணிக்கும் வகையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் புகைப்படம், அவர்களது செல்லிடப் பேசி எண்ணுடன் கூடிய தகவல் பெயர் பலகை திறக்கப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் உடனடியாக அந்தந்த காவலர்களுக்கு குற்றச்சம்பங்களைத் தெரியப்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சி துவக்கமாக பழங்கரை, சேவூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர்கள் செந்தில், அன்பரசு, காவலர்கள் மயில்சாமி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


